கந்தர்வகோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால், கந்தர்வக்கோட்டை பகுதிகளில் கரும்பு பயிருக்கு களை வெட்டி யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட உரங்களை இட ஆர்வம் காட்டுகின்றனர். கடுமையான வெயில் தாக்கி வந்த நிலையில், களையெடுத்து, உரமிட்ட நிலையில், இயற்கையாக மழைபெய்ததால், பயிர்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மழையால் விவசாய பணிகள் விறுவிறு
0