கந்தர்வகோட்டை, ஜூன் 28: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் முன் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வட்டார வள பயிற்றுநர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் சமூக தணிக்கைகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. அதில், திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றப்பட்டது. கூட்டத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.