கந்தர்வகோட்டை,ஆக.24: கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு வயது முதல் 19 வயது முடிய உள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கு புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் வழிகாட்டுதலின்படி குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர் கவுசல்யா ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் அனைவருக்கும் அன்பாண்டசோல் குடல்புழு நீக்க மாத்திரை வழங்கி அதன்பயன்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுப்புற சுகாதாரம் பற்றி மாணவ- மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.