கந்தர்வகோட்டை,ஆக.7: கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி சார்ந்த சுமார் 150 மாணவ-மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேலு தொடங்கி வைத்தார்.
இதில் மூன்றாம் வகுப்பு முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை பயிலும் மாணவ-மாணவிகள் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துகுமார், நீதிராஜன் ஆகியோர் இருந்தனர்.