கந்தர்வகோட்டை,ஆக 6: கந்தர்வகோட்டையில் பூட்டியே கிடக்கும் சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் கொத்தகம் சாலையில் வாங்கர ஒடைகுளத்தில் மேல்கரையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பயன்பாடு இல்லாமல் பூட்டி உள்ளது.
இதனால் இப்பகுதி ஏழை எளிய மக்கள் திருமணம், பூப்பூ நீராட்டு விழா, நிச்சயதார்த்த விழா, காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்த வசதி வாய்ப்பு இல்லாமல் தனியார் திருமண மண்டபங்களில் நடத்துவதால் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து வருகிறார். ஆகையால் பொருளாதார நெருக்கடிக்கு உட்படுகிறார்கள். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக கந்தர்வகோட்டை கொத்தகம் சாலையில் உள்ள சமுதாயக் கூட்டத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.