கந்தர்வகோட்டை, மே 19: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கந்தர்வகோட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டும், கால்நடைகளுக்கு புல் பூண்டு இல்லாமலும் கடும் வறட்சி நிலவியது.
இந்நிலையில், நேற்று இரவு கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பயிர்களுக்கு விவசாயிகள் உரமிடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.