கந்தர்வகோட்டை, ஆக.30: கந்தர்வகோட்டையில் நடந்த ஓவியம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எம்எல்ஏ சின்னதுரை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு அறிவுத்திறன், ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாரட்டுச் சான்று மற்றும் பரிசளிப்பு விழா கந்தர்வகோட்டை வெள்ளை முனீஸ்வரர் கோயில் திடலில் நடைபெற்றது.
விழாவில் அறிவுத்திறன், ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாரட்டுச் சான்று மற்றும் பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை தலைமை வகித்தார். மேலும் பாராட்டுச் சான்றிதழ் பரிசுகள் வழங்கினார். விழாவில் காசாவயல் குமார் தலமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் கராத்தே, கம்பு சுற்றும் விளையாட்டு நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.