வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் சன்னதியின் முன்பாக அமர்ந்து பிரம்மாண்ட சஷ்டி பாராயண வழிபாடு செய்தனர். ஆறாம் நாள் நிகழ்ச்சியாக நவ.18ல் சூரசம்ஹாரமும், நவ.19ல் சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. கந்த சஷ்டி விழா குழு தலைவர் மாலாவீரராகவன், கமிட்டி நிர்வாகிகள், அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.