திண்டுக்கல், மே 25: திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (27). நேற்று இவரும் கல்நாட்டான்பட்டியை சேர்ந்த அவரது நண்பர் பால்பாண்டியும் (29) சிறுமலை புதூர் அருகே நின்று வேலை விஷயமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த யாகப்பன்பட்டியை சேர்ந்த டேனியல் ராஜா (21), இந்திரா காலனியை சேர்ந்த பிரவீன் குமார் (20), பள்ளபட்டி தேவர் நகரை சேர்ந்த சூர்யா (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் ராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1200 பணத்தை பறித்து கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராமன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியல் ராஜா, பிரவீன் குமார், சூர்யா மற்றும் சிறுவனை கைது செய்தனர்.