செய்முறைகத்தரிக்காயை நாலாக வெட்டிக் கொள்ளவும். அதாவது உள்ளே மசாலா ஸ்டப் செய்வது போல் வெட்டவும். கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் இவை எல்லாம் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவையை கத்தரிக்காயினுள் ஸ்டப் செய்யவும். குக்கரில் எண்ணையை சேர்த்து சூடானதும், அதில் கத்தரிக்காயை சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அல்லது கடாயில் எண்ணை சூடானதும் கத்தரிக்காயை சேர்த்து இரண்டு பக்கம் நன்கு சிவக்க எடுக்கவும். இது கறி சாதத்துக்கு சுவையாக இருக்கும்.