கடத்தூர், ஆக.2: கடத்தூர் ஒன்றியம், சில்லாரஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நேற்று ஊராட்சி நிர்வாகம் மற்றும் தர்மபுரி கிருஷ்ணா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்தம், கண்ணில் சதை வளர்ச்சி, அழற்சி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், சில்லாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஹரியா ஹர்ஜூனன் துவங்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் பொற்செல்வராசு உள்ளிட்ட ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கண் சிகிச்சை மருத்துவ முகாம்
49
previous post