தூத்துக்குடி, மே 30: தூத்துக்குடி அடுத்த அ.குமாரரெட்டியார்புரம், மேலத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (62). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தெற்கு வீரபாண்டியாபுரம் கண்மாயில் மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற குருசாமி தண்ணீருக்குள் மூழ்கினார்.
தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கண்மாயில் மூழ்கிய குருசாமியை 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.