சிவகாசி, செப்.3: கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே இடையன்குளம் கண்மாய் பகுதியில் துரைச்சாமிபுரம் விஏஓ காமராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மணல் அள்ளும் எந்திரத்தை கொண்டு 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர்.
அந்த 2 பேரையும் பிடித்து போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் வெம்பக்கோட்டை அருகே பி.திருவேங்கிடபுரத்தை சேர்ந்த மாடசாமி, மாரிமுத்து என தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.