பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் இண்டேன் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி மலர் இண்டேன் கேஸ் நிர்வாகி சதாசிவம் மற்றும் பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் சிலிண்டர் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அதனை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விளக்கினர். இதனைத்தொடர்ந்து உங்கள் சமையலறையின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யுங்கள் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.