வருசநாடு, ஆக. 12: கண்டமனூர் கிராமத்தில் கணேசபுரம் சாலை ஓரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு மின் சப்ளை செய்வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது அந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கு டிரான்ஸ்பார்மர் இடையூறாக இருந்து வருகிறது.
எனவே டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது டிரான்ஸ்பார்மரை ஒட்டியவாறு கட்டிடங்கள் அமைந்துள்ளன. டிரான்ஸ்பார்மரின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனால் அங்கு ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரால் மின் விபத்து அபாயம் உள்ள நிலையில், டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்து தர வேண்டும் என அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.