திருப்பூர்: கணக்கம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பணிகள் குறித்து, தோட்டகலைத்துறை இயக்குநர் பிருந்தாதேவி மற்றும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.திருப்பூர் வட்டாரத்தில் கணக்கம்பாளையம் கிராமத்தில் வேலுச்சாமி என்பவர் 3 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்ட பசுமை குடில் பயிர் சாகுபடி குறித்தும் ஆய்வு செய்தனர்.