தேனி, ஜூலை 2: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலத்தில் கட்டுமான பொருட்கள் எம் சாண்ட், பிசாண்ட் ஜல்லி இவைகளின் கடும் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகையால் ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, முடங்கி போயுள்ள கட்டுமான தொழில் தொடர்ந்து நடைபெறவும், இதற்குண்டான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.