மதுரை, ஆக. 7: கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களுக்கான ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சமயசெல்வம், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சிவக்குமார், ராஜேஷ், பிச்சைகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.