சிவகங்கை, மே 27: சிவகங்கையில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சேதுராமன், மாவட்ட செயலாளராக அய்யம்பாண்டி, மாவட்ட பொருளாளராக நாகராஜன், துணை நிர்வாகிகளாக முருகேசன், சோணைமுத்து, சரண், கேபி.முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர். எம். சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையேற்றம் காரணமாக கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் விலையை அரசே நிர்ணயம் செய்து கட்டுமான தொழில் பாதிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.