திருமங்கலம், செப். 1: திருமங்கலம் அருகே கட்டிலில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் வடகரை காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மனைவி ஹேமா. இவர்களது இரண்டரை வயது மகள் அவந்திகா, நேற்று மதியம் வீட்டில் உள்ள கட்டில் மீது அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மயங்கி அவந்திகாவை பெற்றோர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தொிவித்தனர். திருமங்கலம் தாலுகா போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பியதுடன் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.