திருத்துறைப்பூண்டி, ஜூன் 4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒற்றுமை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் மாதத்தின் முதல் திங்கள்கிழமை தோறும் ஒற்றுமையை வளர்ப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் மு ச பாலு தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியன் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதி ஏற்றனர். குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும் அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் அவர்களிடம் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என உறுதிமொழி ஏற்றனனர்.இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்றனர்.