திருத்துறைப்பூண்டி, ஜூலை 2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு ச பாலு தலைமை வகித்து பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வன்முறை குற்றங்கள் அதிகமாகின்றன என்றார்.