திருத்துறைப்பூண்டி, செப். 13: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் ஸ்டெம் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வரவேற்றார். ஆசிரியை தனுஜா தலைமை வகித்து பேசுகையில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள், அறிவியல் சோதனை மற்றும் கணித பயிற்சியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் ஸ்டெம் என்றார்.
வட்டார ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மொழி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப் செயல்படும் முறை, பலூன் ஏவுகணை, ஒளி எதிரொலிப்பு, காந்த ஈர்ப்பு விசை உட்பட பல பரிசோதனைகளை அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார். ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.