அரூர், அக்.5:கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(28), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கம்பைநல்லூர் போலீசில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சசிக்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.