ராயக்கோட்டை, அக். 19: ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி குமார்(35). இவர் வேலை ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சின்னகுட்டி(எ) மாதேஷ் என்பவர் காரை வேகமாக ஓட்டிவந்து, குமார் மீது மோதுவது போல் நிறுத்தினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேசுடன் வந்த முனிராஜ் என்பவர், போன் மூலம் குமார் என்பரை ெதாடர்பு கொண்டு, கட்டிட மேஸ்திரி குமாரிடம் போனை கொடுத்துள்ளார். அப்போது முனிராஜின் நண்பர் குமார், மேஸ்திரி குமாருக்கு, போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கோவிந்தராஜ் (30), மாரியப்பன் (35), ராஜா(50) மற்றும் சிலருடன் சம்பவ இடத்திற்கு வந்த குமார், மேஸ்திரி குமாரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார், வன்னியபுரம் மாதேஷ், முத்து, பெருமாள், கோவிந்தராஜ்(30), மாரியப்பன், ராஜா, வெங்கடேஷ்(45), கூத்தனப்பள்ளி காசிராஜ்(52), அனுமந்தபுரம் முனிராஜ், சுப்பு, குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.