திருப்பூர், ஜூன் 20: சாலையோரங்கள் மற்றும் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக இதுபோன்ற கொடிக்கம்பங்களை மாவட்டம் முழுவதும் அகற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர் தென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கட்சி கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் அகற்றினர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, கோர்ட்டு உத்தரவை பின்பற்றி பாரபட்சமின்றி கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி வருகிறோம். இதற்கு கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.