விருதுநகர், ஜன. 28: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் குடியரசு தின விழாவில் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் விதொச வரதராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டும், 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வத்திராயிருப்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
விழாவிற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம் மற்றும் செல்வமூர்த்தி மற்றும் மாநிலத் துணைத் தலைவர் சுந்தரம், மாநில பொது செயலாளர் தமிழ்ச்செல்வன், பிசிசி மெம்பர் காளிதாஸ், மாநில அமைப்பாளர் கார்த்திகேயன், மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, ஆர்.டி வட்டார தலைவர் ஆட்டோ செல்வம், கிழக்கு வட்டார தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.