தர்மபுரி, நவ. 16: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பொடுக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் விநாயகம் (31). இவர் நட்டஅள்ளி பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி, விநாயகம் கடைக்கு முன்பு சரக்கு வேனை நிறுத்தி இருந்தார். இந்நிலையில், அந்த வேனை காணவில்லை. இதுகுறித்து விநாயகம் இண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேனை திருடிச்சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடை முன் நிறுத்திய சரக்கு வேன் திருட்டு
0
previous post