கடையம்,நவ.1: கடையம் நித்யகல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது. பத்தாம் திருநாளான (நவ. 9ம்தேதி) காலை 5 மணிக்கு அம்பாள் தவசுக்கோலமும், மாலை 3 மணிக்கு சிவன் கோயில் அருகில் சுவாமி அம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தலும், மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, சிறப்பு பள்ளியறை பூஜை மற்றும் திருக்கல்யாண அன்னதானமும் நடைபெறுகிறது.