கடையம், ஆக. 26: கடையம் அருகே மந்தியூரில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் ₹7 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். நாட்டாமை சந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராகவேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பூங்கோதை, அமுதா, அஜித்குமார், நிர்வாகிகள் இளங்கோ, அகம் முருகன், ஏகேமுருகன், கண்ணாடி மாரியப்பன், மகேந்திரன், ராமச்சந்திரன், வேலம்மாள், ஜமாத் தலைவர் யூசூப் பொறுப்பு குழு சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடையம் அருகே ₹7 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி
previous post