கடையம், ஆக.20: கடையம் அருகே தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாதாமாதம் பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் சென்றனர். பின்னர் தோரணமலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பாக கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்றோர், தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெறவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், வயநாடு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ்வில் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை நடத்தினர். ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
கடையம் அருகே தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்
previous post