Thursday, February 22, 2024
Home » கடையம் அருகே உடல்நலக்குறைவால் தொழிலாளி சாவு

கடையம் அருகே உடல்நலக்குறைவால் தொழிலாளி சாவு

by Karthik Yash

கடையம், ஜன.24: தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள நரையப்பபுரத்தைச் சேர்ந்த சிவனணைந்த பெருமாளின் மகன் பொன் செல்லத்துரை (48). உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்து அவரது உடலை பார்த்த அவரின் அப்பாவின் தங்கை என்ற முறையில் அத்தையும், கட்டேறிபட்டியைச் சேர்ந்த கணேசனின் மனைவியுமான காளியம்மாள் (65) என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காளியம்மாளை பரிசோதித்த மருத்துவர், மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அடுத்தடுத்து நடந்தசம்பவங்கள் தீராத சோகத்தை ஏற்படுத்திஉள்ளன.

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi