கடையநல்லூர்,பிப்.20: கடையநல்லூர் அருகே பொய்கை ஊராட்சி கோவிலாண்டனூர் புனித சவேரியார் ஆலயம் அருகில் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், யூனியன் துணை சேர்மனுமான ஐவேந்திரன் தினேஷ் தலைமை வகித்தார். பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். திமுக கிளை செயலாளர் சவரிராஜ் வரவேற்றார். நாட்டாண்மைகள் சவரிமுத்து, பொன்ராஜ், செல்வம், கிளை செயலாளர்கள் முருகன், கடல், செல்லப்பா, அருணாசலம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரலிங்கம், மாரியப்பன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், திரிகூடபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செய்யது மீரான், நிர்வாகிகள் தாஸ், ரஞ்சித், அருள், தர்மர், ஸ்டீபன், தினகரன், ராஜ், பிரான்சிஸ், விக்டர், ஜான்சன், மாரியப்பன், ராஜன், ஜெயராஜ், அருணா நல்லையா, யாசின், அரசு ஒப்பந்ததாரர் அரவிந்த் முகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். புனித சவேரியார் ஆலய அருட்தந்தை ஜெகன்ராஜா நன்றி கூறினார்.
கடையநல்லூர் அருகே ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை திறப்பு
0
previous post