கடையநல்லூர், ஜூலை 26: ஆலங்குளம் சிவலிங்கபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த நயினார் மகன் பாலமுருகன் (45). லாரி டிரைவான இவர் நேற்று அதிகாலையில் மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி மினி கன்டெய்னர் லாரியை ஓட்டி சென்றார். கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டி அருகே லாரி சென்று கொண்டிருந்த போது எதிரே குற்றாலத்தில் இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி அம்மன்குறிச்சியைச் சேர்ந்த மணிமுத்து மகன் பிரபு (32) என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் உள்ள பாதுகாப்பு பலூன் வெடித்ததால் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காரில் வேறு நபர்கள் யாரும் இல்லை. தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இரண்டு டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடையநல்லூரில் கன்டெய்னர் கார் மோதல்
90
previous post