பேராவூரணி: பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஜகுபர்அலி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நீலமேகம் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலவரம், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார் . கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் உள்ள கழனிவாசல் பாசனக்கிளை வாய்க்கால், அம்மையாண்டி கிராமத்தில் உள்ள இரண்டு தேக்குப் பாலம் மற்றும் ஒரு கேணிப் பாலம், ஆதனூரில் உள்ள கேணிப்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது.