தேன்கனிக்கோட்டை, ஜூலை 21: தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன், விவசாயி. இவரது 17 வயது மகள் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து, கடைக்கு செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும், மாணவி பற்றி தகவல் இல்லை. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடைக்கு சென்ற மாணவி மாயம்
48
previous post