ராசிபுரம், டிச.12: ராசிபுரம் நகராட்சி கடைவீதி பகுதியில், வினோத்குமார் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இக்கடையில், நேற்று காலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை உயிருடன் பிடித்து, காப்புக்காடு வனப்பபகுதியில் விட்டனர்.
கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
0