கன்னியாகுமரி, ஆக. 24: விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகு சேவை காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. தற்போது திருவள்ளுவர் சிலை பகுதியில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2 நாட்களாக படகு சேவை தாமதமாக தொடங்கி வருகிறது. அதுபோல நேற்றும் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக, 4 மணிநேரம் தாமதமாக 12 மணியளவில் படகு சேவை தொடங்கியது.