சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீன்வள மேம்பாட்டிற்க்கான அர்ப்பணிப்பை சித்தரிக்கும் வகையில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் புதிய இலச்சினை அறிமுகப்படும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை ஒன்றிய மீன்வளத் துறை செயலாளர் ஜித்தேந்திர நாத் ஸ்வையின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். மேலும், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு மற்றும் புதுப்பிக்கப்படும் இறால் குஞ்சு பொரிப்பங்களின் மின்னனு சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அமர் சிங் சவுகான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதில், நீதிபதி அமர்சிங் சவுகான் பேசுகையில், ‘‘கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், அகில இந்திய இறால் குஞ்சு பொரிப்பவர்கள் சங்கம், தமிழ்நாடு இறால் குஞ்சு பொரிப்பக சங்கம், அகில இந்திய இறால் குஞ்சு பொரிப்பவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்….