கடலூர், செப். 4: கடலூர் அருகே வீட்டின் திண்ணையில் கழட்டி வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(46). இவரது மகள் மோகனப்பிரியா. இவர் தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழட்டி அவரது வீட்டின் திண்ணையில் வைத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், மோகனப்பிரியாவின் செயினை நைசாக திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.