தொண்டி, ஆக. 17: தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் வலையில் சிக்கிய கடற்பசுவை உயிருடன் விட்டதற்காக ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. கடல் பசு, கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. வலையில் சிக்கும் உயிரினங்களை கடலில் விட அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்புதாளையை சேர்ந்த மீனவர்களின் இரு படகுகளில் 2 கடற்பசு சிக்கியது. வலையில் சிக்கிய 2 கடற்பசுவையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். நம்புதாளை மீனவர்கள் முருகானந்தம், பூமாரி,கரன், நாகூர் பிச்சை, பரதன், பெரியசாமி, அடையாள வேலு ஆகியோரை கலெக்டர் சிம்ரன ஜித் சிங் காலோன் பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர்.