திருவாடானை, ஜூலை 13: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் தலைவர் முகமது முத்தார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய மேரி சாரல், ஒன்றிய குழு துணை தலைவர் செல்விபாண்டி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் சிவசங்கீதா: பாசிபட்டினம் கலியன் நகரி போன்ற கடற்கரைப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
10 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஓடவயலில் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. முகமது முக்தார்(தலைவர்): கட்டி வயலில் ரவுண்டானா அமைக்கப்படுவதால் குடிதண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிரந்தரமாக அங்கு போர்வெல் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை பழைய பைப்பை சரி செய்து குடிதண்ணீர் கிடைத்திட தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.