வருசநாடு, மே 25: கடமலைக்குண்டு அருகே சிதம்பரம் விலக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மயானத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் எரியூட்டும் கொட்டகை, தடுப்புச்சுவர், காத்திருப்போர் அறை, தெருவிளக்கு, குடிநீர்வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், “மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இறுதி காரியங்களை சிரமத்துடன் செய்ய வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’’ என்றனர்.