Saturday, September 30, 2023
Home » கடமலைக்குண்டுவில் சிதிலமான கிளை நூலகம் சீரமைக்கப்படுமா? மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கடமலைக்குண்டுவில் சிதிலமான கிளை நூலகம் சீரமைக்கப்படுமா? மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

by Karthik Yash

வருசநாடு, ஆக. 24: கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை இளைஞர்கள், முதியோர்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.பெரும்பாலும் அரசு வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்கள் அதிக அளவில் வந்து தினசரி நாளிதழ் படித்துச் செல்கின்றனர். இந்த நூலகம் கடந்த 2003ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதியில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு செய்யாததால் கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தும் பழுதடைந்தும் கிடக்கிறது. நூலகத்தை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து கிடப்பதால் விஷ பூச்சிகள் அடையும் கூடாரமாக மாறி வருகிறது.
இந்த நூலகத்திற்கு படிக்க வரும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ரோடு வசதி மற்றும் கட்டிடம் பராமரிப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதேபோல் மயிலாடும்பாறை கிராமத்திலுள்ள நூலகம் கடந்த 1993 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை மூலமாக கட்டி முடிக்கப்பட்டது .இந்த நூலகத்திற்கு மயிலாடும்பாறை, நேருஜிநகர் ,மூலக்கடை, அண்ணாநகர், பொன்னன்படுகை பென்னிகுக் நகர் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான வாசகர்கள் புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் படிக்க வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாதால் தற்போது மேற்கூரைகள் சேதமடைந்து, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் நூலகர் மற்றும் படிக்க வரும் வாசகர்கள் அச்சத்தில் உள்ளனர். பழுதடைந்து கிடக்கும் மயிலாடும்பாறை நூலக கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு சமூக ஆர்வலர் பழக்கடை மகாலிங்கம் கூறுகையில்: கடமலைக்குண்டு, மயிலாடும்பாறையில் அமைந்துள்ள நூலக கட்டிடம் பழுதடைந்து மேற்கூரை சேதமடைந்து உள்ளது. இதனால் நூலக வாசகர்களின் பாதுகாப்பு கருதி இந்த கட்டிடத்தை இடித்து புதிய நூலகக் கட்டிடத்தை கட்டி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?