கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரி பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சையத் மாலிக் (40), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 21ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி வாகிதா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதிக அளவில் கடன் உள்ளதாகவும், அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த கணவர் மாயமாகி உள்ளார். அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மாயம்
previous post