தர்மபுரி, மே 19: கடத்தூர் அருகேயுள்ள நல்லகுட்லள்ளி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் மோனிகா அரசு(18). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்தியவர், வீட்டில் இருந்து வந்தார். பின்னர் டைப் ரைட்டிங் பயிற்சிக்கு சென்றுவந்தார். இந்நிலையில் கடந்த 14ம்தேதி பயிற்சிக்கு சென்ற மோனிகா அரசு, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மூர்த்தி கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கடத்தூர் அருகே இளம்பெண் மாயம்
50
previous post