Sunday, February 25, 2024
Home » கடத்தூர் அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா

கடத்தூர் அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா

by Karthik Yash

கடத்தூர், பிப்.9: கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியைகள் அனுராதா, கீதா மற்றும் கோகிலா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தமிழாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடிப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில், மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியை ரமாதேவி வழங்கி பாராட்டினார். விழாவையாட்டி, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

five + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi