விருத்தாசலம், மார்ச் 6: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார், விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணிமுத்தாற்றின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், விருத்தாசலம் அருகே உள்ள கோ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் கணேசன் மகன் லிவிங்ஸ்டன் ஜெயராஜ் (24), பரவலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் ஆகாஷ் (25), வீரமணி மகன் விக்னேஷ் (26), தாமோதரன் மகன் தினேஷ் (24), செல்வம் மகன் செந்தில்நாதன்(39), என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, ₹3 ஆயிரத்து 940 ரொக்க பணம், 2 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
0