அரூர், ஜூலை 6:அரூர் அருகே, கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, ராமியம்பட்டி பகுதியில் சோதனை நடத்தியபோது, ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே ஊரை சேர்ந்த அசோக்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
0
previous post