திருப்பூர், ஜூன் 23: திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பராயன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிமந்தா சார்பாங் (21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஜிமந்தா சார்பாங்கை கைது செய்தனர்.